ஸ்ருதிமயமான நடிகையின் திடீர் அமைதி – இசை ஆசையால் அடக்கி வாசிக்கும் நடிகை

|

சென்னை: எண்பதுகளின் ஹீரோவின் வாரிசு என்ற முகவுரையோடு சினிமாவில் நுழைந்த ராக மயமான நடிகை இப்போதெல்லாம் படப்பிடிப்பு தளங்களில் அடக்கி வாசிக்கின்றாராம்.

முன்பெல்லாம் மடை திறந்த வெள்ளமாக பேசிக் கொண்டிருந்த நடிகை இப்போது தேவையில்லாமல் யாரிடமும் பேசக்கூடாது என்று முடிவு செய்துள்ளாராம்.

ஸ்ருதிமயமான நடிகையின் திடீர் அமைதி – இசை ஆசையால் அடக்கி வாசிக்கும் நடிகை

ஷூட்டிங் முடிந்தபிறகு இப்போதெல்லாம் ஹெட்போனை காதில் மாட்டிக் கொண்டு பாட்டு கேட்டவண்ணம் இருக்கிறாராம்.

இவருடைய திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம் என்று விசாரித்தால், இப்போதைக்கு நடிப்புதான் அவருடைய முழு நேர வேலை என்றாலும், எதிர்காலத்தில் இசைத்துறையில் பெரிய அளவுல சாதிக்கனுமாம்.

அதனால, கிடைக்கிற நேரத்துல புது புது ஆல்பங்களை வாங்கி, அந்த ஆல்பங்களின் மூலமாக இசை நுணுக்கங்களை அறிந்து வருகிறாராம். அதனாலேயே வீண் வெட்டி பேச்சுக்களையெல்லாம் இப்போதிருந்தே குறைத்துக் கொண்டாராம்.

 

Post a Comment