டப்பிங் சீரியல்கள்... பெப்சி - சின்னத்திரை கலைஞர்கள் ஏப் 15-ல் வேலை நிறுத்தம்

|

தொலைக்காட்சிகளில் டப்பிங் சீரியல்களை ஒளிபரப்புவதை நிறுத்தக் கோரி வரும் ஏப்ரல் 15-ம் தேதி பெப்சி மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

டப்பிங் சீரியல்கள்... பெப்சி - சின்னத்திரை கலைஞர்கள் ஏப் 15-ல் வேலை நிறுத்தம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னத்திரை தொடர் இயக்குநர் பாலாஜி யாதவ், சென்னையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவர் கடன் பிரச்சினையின் காரணமாகவே தற்கொலை செய்துகொண்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும், தற்போது தொலைக்காட்சிகளில் வேறு மாநிலத்தில் நெடுந்தொடர்கள் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு ஒளிபரப்பபடுவதால், சின்னத்திரை கலைஞர்கள் வேலை இல்லாமல் கஷ்ட்டப்படுவதாகவும், பாலஜி யாதவின் மரணமும் அப்படி நேர்ந்ததுதான் என்றும் கூறப்பட்டது.

இதையடுத்து, டப்பிங் தொடர்களை இனி தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு, நேற்று சென்னை பிரசாத் லேபில், பாலாஜி யாதவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை நடத்தியது. அத்துடன் இனி தமிழ் டிவிகளில் டப்பிங் தொடர்கள் ஒளிபரப்புவதற்கும் கண்டனம் தெரிவித்தது.

டப்பிங் சீரியல்கள்... பெப்சி - சின்னத்திரை கலைஞர்கள் ஏப் 15-ல் வேலை நிறுத்தம்

மேலும், டப்பிங் சீரியல்களை எதிர்க்கும் விதமாக வரும் ஏப்ரல் 15ஆம் தேதி, ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தையும் அறிவித்துள்ளது.

அதன்படி நாளை மறுநாள் (ஏப்.14) தமிழகம் முழுவதும் சின்னத்திரை சம்மந்தமான படப்பிடிப்புகள், டப்பிங் உள்ளிட்ட எந்த வேலைகளும் நடைபெறாது, என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெப்சி அமைப்பும் பங்கேற்கிறது.

மேலும் மொழி மாற்றத் தொடர்களை தொடர்ந்து ஒளிபரப்பும் சேனல்கள், நிறுவனங்களுக்கு எதிராகவும் போராட்டம் நடக்கும் என்று பெப்சி அறிவித்துள்ளது.

நேற்று பிரசாத் லேபில் நடைபெற்ற சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சங்கத்தின் கண்டன போராட்ட கூட்டத்தில் இயக்குநர் சமுத்திரக்கனி, நடிகை குட்டி பத்மினி, நடிகை நளினி, பூவிலங்கு மோகன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துக்கொண்டார்கள். பெப்சி சார்பில் அதன் தலைவர் ஜி சிவாவும் கலந்து கொண்டார்.

 

Post a Comment