திருட்டுக் கல்யாணம் என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி. பிரசாத் லேப் தியேட்டரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ஒரு சுவாரஸ்யம்.
நிஜத்தில் திருட்டுக் கல்யாணம் செய்த 1022 ஜோடிகளிடம் பேசி, அவர்களில் ஒரு ஜோடியினரை மட்டும் தேர்வு செய்து அவர்கள் அனுமதியுடன் இந்தப் படத்தை எடுத்துள்ளனர்.
ஷக்தி வேலன் என்ற புதியவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரங்கயாழி, தேஜஸ்வீ நடிக்கிறார்கள்.
இசை வெளியீட்டுவிழாவில் பேசிய ஷக்திவேலன் படத்தின் கதை குறித்துக் கூறுகையில், "பெற்றோரை மீறி வீட்டை விட்டு ஓடிப் போன இளம் ஜோடியின் கதை இது.
இதற்காக உண்மையிலேயே திருட்டுக் கல்யாணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழும் 1022 தம்பதிகளில் ஒரு தம்பதியினரை தேர்வு செய்து விழாவிற்கு வரவழைத்தோம்.
என் கதையும் இவர்களின் கதையும் ஒரே மாதிரி இருந்ததால், அவர்களிடம் சொல்லி இதனைப் படமாக்கினேன்," என்றார்.
விழாவுக்கு இந்த ஜோடியும் வந்திருந்தது. கே.பாக்யராஜ், சசி, கே.ரங்கராஜ் ஆகியோர் இசைத் தட்டை வெளியிட, அந்த தம்பதியினர் பெற்றுக்கொண்டனர்.
Post a Comment