சென்னை: சின்ன நம்பர் நடிகையின் நிச்சயதார்த்தம் திருமணம் வரை செல்லாது என்று நான் தான் அப்பொழுதே கூறினேனே என்று தனது பெயரை தலைகீழாக மாற்றிய நடிகை சந்தோஷமாக கூறி வருகிறாராம்.
சின்ன நம்பர் நடிகைக்கும், சினிமா தயாரிப்பாளருக்கும் திருமணம் நிச்சயமானது. ஆனால் அது நிச்சயதார்த்தத்தோடு நின்றுவிட்டது. திருமணம் நின்று ஆளுக்கொரு திசையாக சென்றுவிட்டனர். அதிலும் நடிகையோ தனக்கு ஒரு காலத்தில் நிச்சயம் செய்யப்பட்டவரின் படங்களில் நடிக்கக் கூடாது என்பதில் கவனமாக உள்ளார்.
இந்நிலையில் சின்ன நம்பர் நடிகையின் திருமணம் நின்று போனதில் தனது முதல் பெயரை பின்னால் போட்டு பின்னால் இருந்த மறுபாதி பெயரை முன்னாள் போட்ட நடிகைக்கு ஏக சந்தோஷமாம். நடிகையின் திருமணம் நின்று போனதை பெயரை மாற்றிய நடிகை பார்ட்டி வைத்து கொண்டாடினாராம்.
எனக்கு அப்பவே தெரியும் இது திருமணம் வரைக்கும் எல்லாம் செல்லாது என்று. பார்த்தீங்களா நான் கூறியது போன்று தான் நடந்துள்ளது. இரண்டு பேரின் குணத்திற்கும் ஒத்து வராது என்று எனக்கு நன்றாகத் தெரியும் என்று பெயரை மாற்றிய நடிகை பெருமையடித்து வருகிறாராம்.
சின்ன நம்பர் நடிகையின் திருமணம் நின்று போனதற்கு பெயரை மாற்றிய நடிகை அவ்வளவு சந்தோஷப்படுவதற்கு பின்னால் ஒரு குட்டி பிளாஷ்பேக் உள்ளதாம்.
Post a Comment