விரைவில் வருது “விஐபி பார்ட் 2” - எதிர்பார்ப்பில் தனுஷ் ரசிகர்கள்

|

சென்னை: கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து வசூலில் சக்கைப் போடு போட்ட வேலை இல்லாப் பட்டதாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்.

மரியானின் தோல்வியால் துவண்டு கிடந்த தனுஷின் மார்கெட்டை தூக்கி நிறுத்தியதில் இந்த படத்திற்கு மிகப் பெரிய பங்கு உண்டு.

Actor Dhanush Started Velai Illa Pattathari Part-2

ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் முதன்முறையாக இயக்கிய இப்படம் சிலபல காரணங்களால் ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளி தள்ளி சென்று ஒருவழியாக வெளியாகிய போது இந்தப் படம் அடைந்த மாபெரும் வெற்றி யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு இருந்தது.

சுமார் 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இப்படம் வசூல் செய்த தொகை 50 கோடி.தெலுங்கிலும் இப்படம் நேரடியாக டப் செய்யப் பட்டு அங்கும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

Actor Dhanush Started Velai Illa Pattathari Part-2

முதல் பாகத்தில் நடிகைகள் அமலா பால் மற்றும் சுரபி நடித்து இருந்தனர்.இரண்டாம் பாகத்தில் நடிகை சமந்தா மற்றும் ஏமி ஜாக்சன் நடிக்கிறார்கள்.

நடிகைகளைப் போலவே தனுஷின் அப்பா அம்மாவும் மாற்றப் பட்டுள்ளனர்.முதல் பாகத்தில் அம்மாவாக நடித்த சரண்யாவிற்கு பதில் ராதிகா அம்மாவாக நடிக்க, அப்பாவாக தன் வயதுக்கு மீறி நடித்த இயக்குனர் சமுத்திரக் கனிக்கு பதிலாக மற்றொரு இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கிறார்.

இசையமைப்பு அதே கொலைவெறி அனிருத் தானாம். முதல் பாகத்தை இயக்கிய வேல்ராஜே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.

வசூலில் முதல் பாகத்தை மிஞ்சுமா இரண்டாம் பாகம்? ....வெயிட் அட் சீ!!!

 

Post a Comment