ராகவா லாரன்ஸ்தான் இன்றைக்கு கோடம்பாக்கத்தின் பரபர நாயகன், இயக்குநர். சொல்லி அடிப்பது மாதிரி அடுத்தடுத்த ஹிட்களைக் கொடுத்து அசரடிக்கிறார்.
அவரது காஞ்சனா 2 படம் வசூலில் பேயாட்டம் போடுகிறது பாக்ஸ் ஆபீஸில். வெளியாகி 25 நாட்களாகியும் ஏ சென்டர்களிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.
திரையுலக வாழ்க்கை இப்படி பரபரப்பாக இருந்தாலும், தன்னை பெற்று, மிகக் கஷ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கிய தன் தாயை கவனிக்க அவர் தவறவில்லை.
அன்னையின் அன்புக்கு மதிப்பே இல்லை அல்லவா... அதை உணர்த்த தனது அம்மா கண்மணிக்கு ராகவா லாரன்ஸ் கோயிலே கட்டுகிறார்.
வரும் ஞாயிறு அன்னையர் தினத்தன்று, தான் கட்டியுள்ள அம்பத்தூர் ராகவேந்திரா கோவில் அருகேயே கோயில் கட்ட அடித்தளம் அமைகிறார். தனது அன்னையின் முன்னிலையில் கோயில் கட்டத் துவங்குகிறார்.
உலகிலேயே வாழும் தாய்க்கு மகனால் கோயில் கட்டப்படுவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment