சென்னை: லக்ஷ்மி மேனன் பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி பெற்றதற்காக அவருக்கு பரிசு கொடுத்து அசத்தியுள்ளார் அஜீத்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடித்து வரும் படம் தல 56. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து படத்தை எடுத்து வருகிறார்கள். படத்தில் அஜீத்தின் பாசக்கார தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்து வருகிறார். அஜீத்துக்கு ஜோடியாக ஸ்ருதி ஹாஸன் நடிக்கிறார்.
அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு நிறைவேறிவிட்ட சந்தோஷத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் லக்ஷ்மி மேனன். இந்நிலையில் லக்ஷ்மி பிளஸ் டூ பொதுத் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளார். இதையடுத்து அவர் கல்லூரிக்கு செல்ல முடிவு செய்துள்ளார்.
லக்ஷ்மி பிளஸ் டூ தேர்வில் தேர்ச்சி அடைந்ததை பாராட்டும் விதமாக பாசக்கார அண்ணன் அஜீத் அவருக்கு பரிசு கொடுத்து இன்ப அதிர்ச்சி அளித்தாராம். அஜீத் பரிசு கொடுத்ததை சற்றும் எதிர்பாராத லக்ஷ்மி மேனன் திகைத்துவிட்டாராம்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இது முடிந்த பிறகு அடுத்தகட்ட படப்பிடிப்பை கொல்கத்தாவில் நடத்த உள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தின் துவக்க பாடலில் அஜீத் அருமையாக டான்ஸ் ஆடியதாக கூறப்படுகிறது.
Post a Comment