சாலையோரம் படத்தில் மீண்டும் வில்லனாக நடித்துள்ளார் இயக்குநர் ஆர் பாண்டியராஜன்.
இயக்குனர் பி.வாசுவிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கே.மூர்த்தி கண்ணன், திரைக்கதை எழுதி இயக்கி வரும் படம் ‘சாலையோரம்'.
இப்படத்தில் ராஜ் கதாநாயகனாகவும், செரீனா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். சிங்கம் புலி, முத்துக்காளை, லொள்ளு சபா மனோகர், பாய்ஸ் ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
மிஷ்கினின் அஞ்சாதே படத்துக்குப் பிறகு பாண்டியராஜன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
துப்புரவு தொழிலாளிக்கும் மருத்துவம் படிக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதலை மையமாக வைத்து இப்படம் உருவாகி வருகிறது இந்தப் படம். இப்படத்தின் ஆடியோ வெளியீடு சென்னை பிரசாத் லேபில் நடந்தது. இதில், தமிழக கவர்னர் ரோசையா கலந்துகொண்டு படத்தின் ஆடியோவை வெளியிட்டார்.
விழாவில் பேசிய பாண்டியராஜன் கூறுகையில், "மிஷ்கின் படத்தில் வில்லனாக நடிக்கும்போதே, இதெல்லாம் எனக்கு சரிப்பட்டு வராது என்று கூறினேன். ஆனால், மிஷ்கினோ உங்களுக்கு வில்லன் கதாபாத்திரம் சரியாக வரும் என்று கூறினார். ஒரு இயக்குvரால் எந்த நடிகரையும் எந்த கதாபாத்திரத்தில் வேண்டுமானாலும் நடிக்கவைக்க முடியும் என்பதற்கு அதுதான் சான்று," என்றார்.
Post a Comment