நடிகராக மாறினார் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி!

|

பிசாசு படத்தின் கன்னட ரீமேக்கில் முதல் முறையாக முக்கிய வேடத்தில் நடிக்கிறார் விஷாலின் தந்தையும் பிரபல தயாரிப்பாளருமான ஜிகே ரெட்டி.

மிஷ்கின் இயக்கி கடந்த ஆண்டு வெளியான படம் பிசாசு. இயக்குநர் பாலா தனது பி ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். பேய்ப் படமாக வெளியான இப்படத்தில் பிரயாகா பேயாகவும், இவருக்கு அப்பாவாக ராதாரவியும் நடித்திருந்தார்.

Vishal's father GK Reddy turns actor

இப்படம் தற்போது கன்னடத்தில் ‘ராக்‌ஷஸி' என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. இப்படத்தை முருகதாஸின் உதவியாளர் அஷ்ரப் இயக்கி வருகிறார்.

இதில் கதாநாயகனாக நவரசன் நடிக்கிறார். நாயகியாக சிந்து லோகநாத் நடிக்கிறார். ராதாரவி நடித்த கதாபாத்திரத்தில் விஷாலின் அப்பாவான ஜி.கே.ரெட்டி நடிக்கிறார்.

முதல் முறையாக முழுநீள கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜிகே ரெட்டி.

பிசாசு படமாக்கப்பட்ட அதே சென்னை பின்னி மில்லில் ஐஸ் பேக்டரி போல் செட் அமைத்து இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். இதில் ஜி.கே.ரெட்டி சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியபோது அந்த இடத்திற்கு விஷால் வந்து நேரில் பார்த்தார்.

தன் தந்தை நடிப்பதைப் பார்த்துவிட்டு, பின்னர் படக்குழுவினரையும் வாழ்த்திச் சென்றார் விஷால்.

 

Post a Comment