யான் படத்துக்குப் பிறகு ஜீவா நடிக்கும் புதிய படம் திருநாள். நயன்தாரா நாயகியாக நடிக்கும் இந்தப் படத்தில் ஜீவா ரவுடியாக நடிக்கிறார்.
அந்த கேரக்டருக்காக செம்பட்டை முடியும், கறுத்த முகமுமாக மாற, 60 நாட்கள் வெயிலில் நடந்தும், ஓடியும் உடலை வருத்தி உடற்பயிற்சி செய்து ஜீவா இப்போது வேறொரு தோற்றத்தில் மிரட்டுகிறார்.
‘திருநாள்' படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து கும்பகோணத்தில் நடைபெற்று வருகிறது. கும்பகோணம் டவுனின் சந்து-பொந்து வழியாக ஜீவா ரவுடிகளை துரத்தும் சண்டைக் காட்சி படமாக்கப்பட்ட போது, நிஜமாக இரண்டு ரவுடி கோஷ்டிகளுக்குள் அதே பகுதியில் சண்டை நடக்க, படக்காட்சியோடு நிஜ ரவுடிகளின் சண்டையும் தத்ரூபமாக படமாகிவிட்டதாம். சுவாரஸ்யமாக இருந்ததாலும் அவற்றையுடம் படத்தில் இடம்பெறச் செய்கிறாராம் இயக்குநர்.
ஜீவா - நயன்தாரா ஜோடியுடன் ‘பாண்டியநாடு' வில்லன் சரத்லோகித்தவா, கருணாஸ், மீனாட்சி, ஜோ மல்லூரி, கோபிநாத் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு-மகேஷ் முத்துசாமி; இசை-ஸ்ரீ; சண்டை-சூப்பர் சுப்பராயன்; கலை-வி.சீனு; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்-பி.எஸ்.ராம்நாத்; தயாரிப்பு-எம்.செந்தில்குமார்.
Post a Comment