சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் பில்லா படத்தை ரீமேக் செய்து அஜித் நடித்த பில்லா படம் சூப்பர்ஹிட் ஆனது, தற்போது ரஜினியின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றான பாட்ஷா படத்தின் 2 ம் பாகத்தில் அஜீத் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வெற்றி பெற்ற படங்களின் தொடர்ச்சியான பாகங்களை எடுக்கும் பழக்கம் ஹாலிவுட்டினரிடம் அதிகம் உண்டு, அந்த பழக்கம் தற்போது தமிழ் சினிமாவிலும் ஆரம்பித்து விட்டது. 30 வருடங்களுக்கு முன்பு வந்த படங்களை எல்லாம் தூசு தட்டி 2ம் பாகம் எடுக்க ஆரம்பித்து விட்டார்கள்.
பாட்ஷா படத்தின் 2 ம் பாகத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை சுரேஷ் கிருஷ்ணாவிற்கும் வந்தது, இது தொடர்பாக ரஜினியை அணுகியபோது அந்த மாதிரி ஒரு எண்ணம் தனக்கு இல்லை என்று மறுத்து விட்டாராம்.
ரஜினியின் பில்லா படத்தில் ஏற்கனவே அஜீத் நடித்து படம் வெற்றி பெற்றது அனைவரும் அறிந்ததே, எனவே பாட்ஷா 2 படத்தின் கதையை அஜீத்திடம் கூறியிருக்கிறார் சுரேஷ்கிருஷ்ணா.
அஜீத்திற்கு பாட்ஷா 2 கதை மிகவும் பிடித்துப் போய் விட்டதாம், விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று கூறுகிறார்கள்.
Post a Comment