சூர்யாவின் 24... படத்தில் வில்லனும் ஹீரோவும் ஒருவரே.. அப்படியென்றால்?

|

சென்னை: மாஸ் படத்திற்குப் பின் இயக்குநர் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 24, இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் இருவரும் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

விக்ரம்குமார் ஏற்கெனவே தெலுங்கில் எடுத்த மனம் படத்தில் நாகார்ஜூனா, அவரது தந்தை நாகேஸ்வரராவ் மற்றும் அவருடைய மகன் ஆகிய மூவரும் நடித்திருந்தார்கள்.

Surya's Upcoming Movie 24

அந்தப்படம் போலவே இந்தப்படத்தில் தாத்தா, தந்தை, மகன் ஆகிய மூன்றுவேடங்களில் சூர்யா நடிக்கிறார் என்று சொல்லப்பட்டது. படத்தில் அவர் மூன்றுவேடங்களில் நடிப்பது உண்மை ஆனால் தாத்தா,அப்பா, மகன் என்ற வரிசையில் இல்லை.

மாறாக அண்ணன் தம்பி என இரண்டுவேடங்களிலும், அண்ணனின் மகனாகவும் ஆக மொத்தம் மூன்றுவேடங்களில் சூர்யா நடிக்கிறாராம்.

இம்மூவரில் ஒருவர் வில்லனாக நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அப்படியானால் படத்தில் நாயகனும் அவர்தான் வில்லனும் அவர்தான் என்று சொல்கிறார்கள்.

அண்ணன் தம்பியாக வரும் சூர்யாவில் அண்ணன் சூர்யாவிற்கு நித்யா மேனனும், மகன் சூர்யாவிற்கு சமந்தாவும் நாயகியாக நடிக்கின்றனரா என்பது தெரியவில்லை.

வெளிவருவதற்குள் ஆந்திர தேசத்தில் சுமார் 20 கோடிக்கு படம் விலை போயிருப்பதால், ரசிகர்கள் மத்தியில் 24 படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகம் நிலவுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

 

Post a Comment