விஜயின் புலியுடன் வெளியாகிறதா விக்ரமின் 10 எண்றதுக்குள்ள "டிரெய்லர்"?

|

சென்னை: விக்ரம் - சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் "10 எண்றதுக்குள்ள" படத்தின் டிரெய்லர், விஜய் நடிப்பில் வெளியாகும் புலி படத்தின் இடைவேளையில் திரையிடப்பட விருக்கிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

விஜயின் நடிப்பில் ஆக்க்ஷன் கலந்த பேன்டஸி திரைப்படமாக உருவாகியிருக்கும் புலி அக்டோபர் 1 ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Vikram’s '10 Enradahukulla' trailer in interval of  Vijay's Puli?

விக்ரம் - சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் "10 எண்றதுக்குள்ள" திரைப்படம் அக்டோபர் 21ம் தேதியன்று காந்தி ஜெயந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது.

கோலிசோடா படத்திற்குப் பின்பு விஜய் மில்டன் இயக்கியிருக்கும் இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது. மேலும் நெடுஞ்சாலைகளைப் பற்றிய ஒரு படமாகவும் 10 எண்றதுக்குள்ள உருவாகியிருக்கிறது.


படத்தின் டிரெய்லரை வரும் 30 ம் தேதியன்று படக்குழுவினர் யூடியூபில் வெளியிடவிருக்கின்றனர். இந்தத் தகவலை சோனி மியூசிக் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்நிலையில் விஜயின் புலி படத்தின் இடைவேளையில் விக்ரமின் "10 எண்றதுக்குள்ள" படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிடவிருப்பதாக, தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இதனால் விக்ரம் ரசிகர்களின் ஆதரவும் புலிக்கு கிடைக்கவிருக்கிறது.

 

Post a Comment