சென்னை: அஜித்தின் வேதாளம் படத்தில் பாடலுக்கு நடன அசைவுகளை கற்றுத் தந்தது கல்யாண் மாஸ்டர்தானாம். இதனை தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் படு மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார் அவர்.
கடந்த சில நாட்களுக்கு முன் படத்தின் முதல் பார்வையும், போஸ்டரும் வெளியான நிலையில் அதுதான் தல ரசிகர்களிடையே "டாக் ஆப் தி டவுன்". தல 56 இதுதான் என்று கூறப்பட்டிருந்த நிலையில், இப்படம் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளதாம்.
After a long time a fantabulous song with Ajit Kumar.. #Thala #Vedhalam #Feeling awesome #Rocking pic.twitter.com/DioXrA2R1F
— kalyan (@kayoas13) September 27, 2015
இப்படத்தில் அஜித்தின் தனிப்பாடல் ஒன்றின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இப்பாடலுக்குத்தான் நடன அசைவுகளை அளித்துள்ளார் நடன இயக்குனரான கல்யாண் மாஸ்டர்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில், "பல நாட்களுக்கு பிறகு அஜித்துடன் ஒரு அற்புதமான பாட்டு..வேதாளம்" என்று டுவிட்டியுள்ளார். சிவாவின் இயக்கத்தில் தயாராகும் "வேதாளம்" தீபாவளி ரிலீசாக வெளிவரும் என்று நம்பப் படுகின்றது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். அவருடைய பிறந்தநாளான அக்டோபர் 16 அன்று இப்படத்தின் இசை வெளியாகலாம் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.
Post a Comment