பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஓரியன் மாலில் ஜிஏபி துணிக் கடையை திறந்து வைக்க வந்த நடிகை ஸ்ருதி ஹாஸனை ரசிகர்கள் மொய்த்துவிட்டார்கள்.
பெங்களூரில் உள்ள ஓரியன் மாலில் ஜிஏபி துணிக்கடை திறப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. கடையை திறந்து வைக்க நடிகை ஸ்ருதி ஹாஸன் வந்திருந்தார். ஜீன்ஸ், ஜிஏபி டி-சர்ட் அணிந்து வந்திருந்த ஸ்ருதியை காண மாலில் ரசிகர்கள் கூடிவிட்டனர்.
கடை திறந்து வைப்பது குறித்து ஸ்ருதி ஏற்கனவே சமூக வலைதளம் மூலம் அறிவித்திருந்தார். இதனால் அவரைப் பார்க்கும் ஆசையில் ரசிகர்கள் மாலில் குவிந்துவிட்டனர். வழக்கத்தை விட அன்று மாலில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ஸ்ருதியை பார்த்ததும் ரசிகர்கள் குஷியாகி அவரை மொய்க்க ஆரம்பித்தனர். இதையடுத்து போலீசார் ரசிகர்களை ஸ்ருதி அருகில் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். போலீசாரையும் மீறி சில ரசிகர்கள் ஸ்ருதியை தொட்டும், கை கொடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ரசிகர்களிடம் இருந்து ஸ்ருதியை காப்பாற்ற போலீசார் தான் படாதபாடு பட்டனர்.
Post a Comment