சென்னை: புலி படத்தில் விஜய்க்கு ஈடாக டான்ஸ் ஆட சிரமமாக இருந்ததாக நடிகை ஹன்சிகா தெரிவித்துள்ளார்.
புலி படம் மூலம் இரண்டாவது முறையாக விஜய்யுடன் சேர்ந்து நடித்துள்ளார் ஹன்சிகா. முன்னதாக அவர் வேலாயுதம் படத்தில் விஜய்யை விரட்டி விரட்டி காதலித்தார். புலி படத்தில் ஹன்சிகா இளவரசியாக நடித்துள்ளார். படம் வரும் அக்டோபர் 1ம் தேதி ரிலீஸாகிறது.
இந்நிலையில் படம் பற்றி ஹன்சிகா கூறுகையில்,
இளவரசியாக நடிப்பது லேசானது அல்ல. என்னை என் அம்மாவும், சகோதரரும் இளவரசி என்று தான் அழைப்பார்கள். இளவரசி கதாபாத்திரத்திற்காக மேக்கப் போட்டு தயாராகவே 2.5 முதல் 3 மணிநேரம் ஆனது.
விஜய் சிறப்பான டான்சர் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு ஈடாக ஆடத் தான் சிரமமாக இருந்தது. படத்தில் நான் 2 பாடல்களுக்கு மேல் வருகிறேன். நான் வரும் பாடல்களுக்கு ராஜுசுந்தரம் மாஸ்டர் தான் டான்ஸ் ஸ்டெப் அமைத்துள்ளார் என்றார்.
Post a Comment