கோடம்பாக்கத்தில் இன்று புதிதாய் அறிமுகமாகும் ஹீரோ கூட தன் படத்துக்கு வைக்க ஆசைப்படுவது, ரஜினி நடித்த ஏதாவது ஒரு படத்தின் தலைப்பைத்தான் (ஆனால் அந்த ரஜினி படத்துக்கோ ஒரு புது இயக்குநரின் கபாலியை வைத்திருப்பதை என்னவென்பது!).
இன்றைய தேதிக்கு ரஜினி நடித்த படங்களைத் தலைப்பாக வைத்து மூன்று படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
ஜீவா - ஹன்சிகா நடிக்கும் புதிய படத்துக்கு போக்கிரி ராஜா தலைப்பைப் பயன்படுத்திக் கொள்ள ரஜினி அனுமதி அளித்துள்ளார். முதலில் அந்தத் தலைப்பில் படமெடுத்த ஏவிஎம்மிடம்தான் அனுமதி கேட்டார்களாம். அவர்கள் ரஜினியைக் கேட்குமாறும், அவருக்கு ஆட்சேபணை இல்லை என்றால் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டார்களாம்!
ரஜினி நடித்த காளி தலைப்பை எப்படியாவது பயன்படுத்தியே தீருவது என கார்த்தி ஆசைப்படுகிறாராம். ரஞ்சித் இயக்கத்தில் இவர் நடித்த மெட்ராஸ் படத்துக்கு முதலில் வைத்த பெயர் காளிதான். பின்னர் மாற்றிவிட்டனர்.
அதிபர் படத்தின் மூலம் ரீ என்ட்ரி ஆகியுள்ள ஜீவன், அடுத்து சூப்பர் ஸ்டாரின் சூப்பர் ரஜினியின் ஜானி படத்தை அதே பெயரில் ரீமேக் செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்கான அனுமதியை உரியவர்களிடம் பெறும் வேலைகள் நடக்கிறதாம்!
Post a Comment