சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் ரஜினிமுருகன் படத்துக்கு எந்த வெட்டும் இல்லாமல் யு சான்று கொடுத்துள்ளது சென்னை மண்டல தணிக்கைக் குழு.
லிங்குசாமி, சுபாஷ் சந்திர போசின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிப்பில், பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ளது ரஜினிமுருகன். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இந்தப் படத்துக்கு டி இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப் படம் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகும் என ஏற்கெனவே விளம்பரங்களை வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று தணிக்கைக் குழுவினர் படம் பார்த்தனர்
எந்தக் காட்சி, வசனத்துக்கும் ஆட்சேபணையோ வெட்டோ தராமல் படத்துக்கு க்ளீன் யு சான்று அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து வரும் செப்டம்பர் 17 வியாழக்கிழமையன்று உலகெங்கும் அதிக அரங்குகளில் படத்தை வெளியிட திருப்பதி பிரதர்ஸ் தயாராகி வருகிறது.
Post a Comment