சென்னை: கே.வி.ஆனந்தின் அடுத்த ஹீரோ யார்யா என்று கேட்டால் அது ஆர்யா தான் என்று கூறுகின்றனர் தகவல் அறிந்தவர்கள். அனேகன் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கும் படம் பற்றிப் பல்வேறு செய்திகள் வந்துவிட்டன.
அடுத்து அவர் அஜித் படத்தை இயக்கப்போகிறார், விஜய் படத்தை இயக்கப்போகிறார் என்று வந்த எந்தத் தகவலையும் கே.வி.ஆனந்த் மறுக்கவில்லை.
ஆனால் இரண்டுநாட்களுக்கு முன்பு அவர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கப்போகிறார் என்று செய்திகள் வந்தன. உடனே அதை மறுத்து ட்விட்டரில் விளக்கம் அளித்தார் கே.வி.ஆனந்த்.
மறுத்ததோடு இந்தச்செய்தியைப் படித்தால் சிவகார்த்திகேயன் மட்டுமல்ல அந்த ஹீரோவும் டென்ஷனாகிவிடுவார் என்று தான் ஒரு பெரிய ஹீரோவிடம் பேசிக் கொண்டிருப்பதை குறிப்பாக சொல்லியிருந்தார் கே.வி.ஆனந்த்.
யார் அந்த ஹீரோ? என்று அவர் சொல்லவில்லை, குறைந்த பட்சம் ஒரு க்ளூ கூடக் கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் இப்போது பேசிக்கொண்டிருக்கும் ஹீரோ ஆர்யா என்றும் அந்தப்படம் தொடர்பான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வந்துவிடும் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த செய்தியாவது உண்மையாகுமா? முடிவு இன்னும் சில தினங்களில்...
Post a Comment