சென்னை: நடிகர் விஜயின் புலி திரைப்படம் சென்சாருக்குத் தயாராகி விட்டது என்று நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. முதலில் விநாயகர் சதுர்த்திக்கு வெளியாகும் என்று அறிவித்து இருந்தனர்.
ஆனால் படவேலைகள் முழுவதும் முழுமை அடையாததால், அக்டோபர் 1 ம் தேதி காந்தி ஜெயந்தியில் உலகம் முழுவதும் புலி திரைப்படம் வெளியாகவிருக்கிறது.
தற்போது படத்தின் ஸிஜி மற்றும் விஎப்எக்ஸ் (VFX) வேலைகள் ஆகியவை முழுமையாக முடிந்து விட்டதால் படம் சென்சாருக்கு விரைவில் செல்லவிருக்கிறது.
விஎப்எக்ஸ் (VFX) பணிகளில் மிகவும் சிறந்தவரான ஆர்.சி.கமலக்கண்ணன் புலி படத்திற்காக மிகவும் உழைத்திருக்கிறார் என்று கூறுகின்றனர். படத்தின் ஒட்டு மொத்த போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகளும் முடிவடைந்து விட்டன.
தொடர்ந்து இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்தும் தனது பின்னணி இசை வேலைகளை ஆரம்பித்து விட்டார், இதனால் இந்த வாரத்திற்குள் படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்ப படக்குழுவினர் முடிவு செய்திருக்கின்றனர்.
தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகவிருக்கும் புலி படத்தின் விநியோக உரிமைகள் முழுவதும், ஏற்கனவே முடிந்து விட்டது குறிப்பிடத்தக்கது.
புலி உறுமத் தயார்...
Post a Comment