தாரை தப்பட்டை... வெளியீட்டு உரிமையை வாங்கியது லைகா!

|

பாலா இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் இளையராஜா இசையில் உருவாகி வரும் தாரை தப்பட்டை படத்தின் வெளியீட்டு உரிமையை லைக்கா நிறுவனம் பெற்றுள்ளது.

சசிகுமார் தயாரித்து ஹீரோவாக நடித்துள்ள படம் தாரை தப்பட்டை. இளையராஜா இசையில் உருவாகும் 1000வது படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்தப் படம் படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.

Lyca bags Thaarai Thappattai

இந்தப் படத்தின் இசை மற்றும் பாலாவின் இயக்கம் போன்றவை படம் குறித்த பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. எனவே படத்தை வாங்க நிறையப் பேர் ஆர்வம் காட்டி வந்தனர்.

இந்நிலையில், லைக்கா மற்று அய்ங்கரன் நிறுவனங்கல் இந்தப் படத்தின் உரிமையைப் பெற்றுள்ளன. விரைவில் படத்தின் முதல் பார்வை போஸ்டர்கள், இசை வெளியீடு நடக்கவிருக்கிறது.

லைகா நிறுவனம் ஏற்கெனவே கத்தி படத்தை சொந்தமாகத் தயாரித்தது. அடுத்து இப்போது 'விசாரணை' மற்றும் 'நானும் ரவுடிதான்' படங்களை வாங்கி வெளியிடுகிறது. அடுத்து பாலா படம்.

ரஜினி படத்தின் தயாரிப்பாளர்களும் இதே லைக்காதான்.

தமிழ் சினிமாவில் வலுவாகக் காலூன்ற அஸ்திவாரத்தை பலமாகவே போட்டு வருகிறது லைகா!

 

Post a Comment