ஏம்பா, நாட்டில் ஒருத்தர் முன்னேறினால் பிடிக்காதா?: பிரியங்கா அப்படி என்ன செஞ்சிட்டார்?

|

மும்பை: பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ஹாலிவுட் தொலைக்காட்சி தொடர் பற்றி பலரும் பலவிதமாக பேசி வருகிறார்கள்.

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ள பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் ஹீரோயினாக நடித்துள்ளார். குவான்டிகோ என்ற அந்த தொடரில் எப்.பி.ஐ. ஏஜெண்டாக நடித்துள்ளார் பிரியங்கா.

Priyanka Chopra

கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த தொடர் அமெரிக்காவில் ஒளிபரப்பானது. சீரியலை பார்த்த பலரும் பிரியங்காவின் நடிப்பை விட அவரின் லுக்கை பற்றி தான் அதிகம் பேசுகிறார்கள். கூகுளில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடியை விட பிரியங்கா தான் அதிகமாக டிரெண்டாகியுள்ளார்.

குவான்டிகோவில் பிரியங்கா அமெரிக்கர்களின் உச்சரிப்பில் ஆங்கிலம் பேசியுள்ளார். அது என்ன பிரியங்காவின் ஆங்கிலம் அப்படி இருக்கிறது என்று பலர் அவரை கிண்டல் செய்து வருகிறார்கள். ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் அதுவும் ஹீரோயினாக நடித்துள்ள முதல் இந்திய நடிகை பிரியங்கா தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் கிடக்கிறது ஹாலிவுட் தொலைக்காட்சி தொடரில் பிரியங்கா அதுவும் ஹீரோயினாக நடித்துள்ளது பெரிய விஷயம் என்கின்றனர் சிலர். பாலிவுட் நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அனில் கபூர், இர்பான் கான், நசிருத்தீன் ஷா, சூரஜ் சர்மா உள்ளிட்டோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment