இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் படங்களின் பட்டியலில் ஏஆர் ரஹ்மான் இசையமைத்த ஒரு படம் மீண்டும் இடம்பிடித்துள்ளது.
அந்தப் படம் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பிய, ஆனால் பாராட்டுக்களையும் குவித்த மஜித் மஜிதியின் முகமது: தி மெஸஞ்சர் ஆப் காட்!
2008-ல் ஸ்லம்டாக் மில்லியனேர் படத்துக்கு இசையமைத்ததன் மூலம் இரு ஆஸ்கர் விருதுகளை வென்றவர் ஏ ஆர் ரஹ்மான்.
அதன்பிறகு கோச்சடையான் உள்ளிட்ட சில படங்களில் இடம்பெற்ற அவரது இசை ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெற்றன.
இப்போது முகமது: தி மெஸஞ்சர் ஆப் காட் படம் சிறந்த வெளிநாட்டு மொழிப் படம் என்ற பிரிவில் ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெற்றுள்ளது.
ஈரானில் மிகப் பெரிய வெற்றிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ளது முகமது. இதன் அடுத்த இரு பாகங்கள் வரும் ஆண்டுகளில் வெளியாகவிருக்கின்றன.
இந்தப் படத்தை இயக்கியதற்காக இயக்குநர் மஜித் மஜிதி மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானுக்கு ஃபத்வா விதித்தது மும்பை இஸ்லாமிய அமைப்பு என்பது நினைவிருக்கலாம்.
Post a Comment