2/16/2011 2:57:08 PM
மீரா நந்தன் நடித்த 'ஜெய் போலோ தெலுங்கானா' தெலுங்கு படம் ஹிட்டாகியுள்ளது. இது பற்றி அவர் கூறியதாவது: கிளாமராக நடித்தால்தான் தெலுங்கில் ஜெயிக்க முடியும் என்று சொன்னார்கள். அதனால் நானும் தெலுங்கில் நடிக்க பயந்ததுண்டு. ஆனால் 'ஜெய் போலோ தெலுங்கானா' படத்தில் கிளாமர் இல்லை. கல்லூரி மாணவியாக நடித்தேன். பிற்பகுதியில் புரட்சிக்கார பெண்ணாக மாறும் கேரக்டர். துளி கிளாமர் இல்லாமலும் ஜெயிக்க முடியும் என்பதை படம் நிரூபித்திருக்கிறது. மலையாளத்தில் கமர்சியல் படங்களில் நடித்தாலும் 'யாத்ரா தொடருன்னு' என்ற ஆர்ட் படத்திலும் நடிக்கிறேன். டி.வி.சந்திரன் இயக்கும் ஆர்ட் படத்திலும் நடிக்கிறேன். கமர்சியல் படங்களில் நடித்தாலும் ஆர்ட் படத்தில் நடிக்கும்போதுதான் நிறைவு கிடைக்கிறது.
Post a Comment