2/16/2011 3:46:05 PM
நல்ல காலம் பொறக்குது…
நல்ல காலம் பொறக்குது…
உலக கோப்பை கிரிக்கெட் சீசன் வர்றதால கோலிவுட் கலக்கத்துல இருக்காம்… இருக்காம்… சில படங்கள் ரிலீசுக்கு தயாராயிருந்தாலும் அதை பெட்டில பூட்டி வைக்கலாமானு யோசிக்கிறாங்களாம்… யோசிக்கிறாங்களாம்…
அபி படத்துல நடிச்ச கணேச நடிகருக்கு சைடு ஹீரோ ரோல்தான் வருதாம்… வருதாம்… இதனால கொஞ்ச படங்களை மறுத்தவருக்கு அந்த வாய்ப்பும் நின்னு போச்சாம். இப்போ வேற லாங்குவேஜ்ல முயற்சி பண்ணினாரு. இதுல மலையாளம், இந்தி பட வாய்ப்பு கிடைச்சிருக்காம். ஆனா அங்கேயும் சைடு ஹீரோ ரோல்தானாம்… ரோல்தானாம்…
சண்டை நடிகருங்க டயலாக் பேசி நடிச்சா, அதுக்காக ஸ்டன்ட் சங்கத்துக்கு தனியா பணம் கட்டணுமாம்… கட்டணுமாம்… அதனாலயே பல படங்கள்ல அவங்க பேசுற சீன் இருந்தாலும் கட்டணம் கட்டாததால படத்துலேருந்து அந்த வசனத்தை கட் பண்றாங்களாம்… பண்றாங்களாம்… இதுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாதுனு சங்கத்துல குரல் எழுப்புறாங்களாம்… எழுப்புறாங்களாம்…
Post a Comment