பட்டாபட்டி பெயர் மாற்றம்
2/16/2011 3:31:03 PM
'பட்டாபட்டி' படத்தின் பெயர் 'போட்டா போட்டி' என்று மாறியதாக அதன் இயக்குனர் யுவராஜ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், ஹரிணி ஜோடியாக நடிக்கும் படம் இது. கிராமத்து கிரிக்கெட் போட்டியை மையமாக கொண்ட கதை. அதனால் நகர்புறத்து கதை என்ற இமேஜ் வந்து விடாமல் இருக்க, 'பட்டாபட்டி' என்று பெயர் வைத்தோம். ஆனால். இந்த சொல்லை தமிழ் பெயராக அரசு அங்கீகரிக்கவில்லை. அதனால் 'போட்டா போட்டி' என்று மாற்றி உள்ளோம். மார்ச் மாதம் ரிலீஸ் ஆகிறது.
Source: Dinakaran
Post a Comment