ஆகஸ்ட் 10 முதல் 'மங்காத்தா' இசை!

|


எப்போது எப்போது என கேட்டுக் கொண்டிருந்த அஜீத் ரசிகர்களுக்கு ஒரு இனிப்பு செய்தி. மங்காத்தாவின் இசை வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கியுள்ள மங்காத்தாவின் இசை வெளியீட்டுத் தேதி இதோ அதோ என இழுத்துக் கொண்டிருந்தது. இந்தப் படத்தின் தயாரிப்பாளராக தயாநிதி அழகிரி இருப்பதால், படம் வெளியாகுமா இல்லையா என்றும் சிலர் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில் உலகமெங்கும் மங்காத்தா இசை வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகும் என சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

மங்காத்தாவில் அஜீத்துடன் மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். த்ரிஷா, லட்சுமி ராய் மற்றும் ஆன்ட்ரியா மூவரும் கவர்ச்சியில் கலக்கியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜாவின் இசை படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என இயக்குநர் வெங்கட்பிரபு கூறியுள்ளார். ஏற்கெனவவே சில பாடல்கள் இணையத்தில் வெளியாகி ஹிட்டும் ஆகிவிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்ட் மாத இறுதியில் படம் வெளியாகக் கூடும் எனத் தெரிகிறது.
 

Post a Comment