7/27/2011 10:41:32 AM
ரிச் இந்தியா டாக்கீஸ் சார்பில் சந்திரசேகர் தயாரிக்கும் படம், 'உயர்திரு 420'. சினேகன், வசீகரன், மேக்னா ராஜ், அக்ஷரா கவுடா, அக்ஷயா, ஐஸ்வர்யா, ரமேஷ் கண்ணா நடிக்கின்றனர். படத்தை இயக்கும் பிரேம்நாத்.எஸ் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டத்துக்குப் புறம்பாக ஏமாற்றுபவர்களை, 420 என்பார்கள். ஹீரோ சினேகன், புத்திசாலித்தனமான 420. நட்சத்திர ஓட்டல் உரிமையாளர் வசீகரனுக்கு ஏற்படும் பிரச்னைகளை சினேகன் எப்படி தீர்க்கிறார் என்பது கதை. எந்த கதையின் சாயலும், காட்சிகளின் சாயலும் இருக்காது. வில்லியாக அக்ஷயா நடிக்கிறார். படத்தின் வசனங்களை எழுதும் முன், சட்டம் மற்றும் மருத்துவ நிபுணர்களிடம் ஆலோசித்தோம். காரணம், அத்துறை தொடர்பான காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. எதையும் தவறாக சொல்லிவிடக் கூடாது என்பதற்காக நிறைய ஆய்வுகள் செய்தோம். தயாரிப்பாளர் சந்திரசேகர், ஒரு கேரக்டரில் நடித்துள்ளார். சென்ஸார் போர்டு, 'யு' சான்றிதழ் அளித்துள்ளது. அடுத்த மாதம் படம் ரிலீசாகிறது. இவ்வாறு அவர் கூறினார். சினேகன், மேக்னா ராஜ், சந்திரசேகர், ஐஸ்வர்யா உடனிருந்தனர்.
Post a Comment