7/27/2011 10:36:44 AM
‘வானம்’ படத்தில் கசப்பான அனுபவங்களை சந்தித்தேன் என்று பரத் கூறினார். அவர் மேலும் கூறியதாவது: சசி இயக்கும் '555' படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். இது என் கேரியரில் முக்கியமான படமாக அமையும். இந்தப் படம் முடியும் வரை வேறு படங்கள் ஒப்புக் கொள்வதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். 'வானம்' படத்தில் சில கசப்பான அனுபவங்களை சந்தித்தேன். 4 பேரின் கதை என்று சொன்னார்கள். ஆனால் ஒருவரின் கதைபோல புரமோட் பண்ணினார்கள். விளம்பரங்களில் ஒருவருக்கே முக்கியத்துவம் இருந்து. நான் உட்பட வேறு யாருக்கும் முக்கியத்துவம் தரப்படவில்லை. இதனால் அடுத்து இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றால் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருந்து கொள்வேன். எல்லா நடிகருக்கும் ஆக்ஷன் படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு கட்டத்தில் நானும் ஆக்ஷன் படங்களில் நடித்தேன். அவை வெற்றி பெறவும் செய்தன. 'கண்டேன் காதலை' படத்துக்கு பிறகு எல்லாவிதமான படங்களிலும் நடிக்க முடிவு செய்தேன். இடையிடையே ஆக்ஷன் படமும் இருக்கும். 'திருத்தணி' பக்கா ஆக்ஷன் படம். 'யுவன் யுவதி', வேறொரு தளத்தில் இருக்கும். இவ்வாறு பரத் கூறினார்.
Post a Comment