ரஜினியால் "ரா ஒன்" நம்பர்.1!

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

ரஜினியால் ‘ரா ஒன்’ நம்பர்.1!

9/19/2011 3:40:10 PM

ஷாரூக்கான் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ரா ஒன்’. ஷாரூக்கின் இந்த ரா ஒன் படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் எந்திரன் படத்தை நினைவுப்படுத்துவதாக செய்திகள் உலா வந்த நிலையில் எந்திரன் வேறு, ரா ஒன் வேறு. நாங்கள் ரஜினி மீது பெரும் மரியாதை வைத்துள்ளோம்.அவரை கவுரவிக்கும் விதத்தில் காட்சியும் வைத்துள்ளோம் என்று நேற்று முன்தினம் ஷாருக்கான் கூறியிருந்தார். தான் கூறியபடி, படத்தில் தன்னை ஆபத்திலிருந்து காப்பாற்றும் சூப்பர் பவர் பாத்திரமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போல் அனிமேஷன் (அ) அவரை போல் உருவம் கொண்ட ஆட்களை வைத்து ஷூட்டிங்க ஷாரூக் திட்டுமிட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் ஷூட்டிங்க செய்த அந்த காட்சியை ரஜினியிடம் ஷாரூக் காண்பிக்க போவதாகவும், ரஜினி ஒப்புக் கொண்டால், மீண்டும் அந்த காட்சியை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ஷூட்டிங் செய்ய ஷாரூக் திட்டுமிட்டுள்ளதாக தெரிகிறது.

அப்படி ரஜினி ஒப்புக் கொண்டால் இதற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அடுத்த மாதம் (அக்டோபர்) 4ந்தேதி நடக்கிறது.

ஷாருக்கான் வில்லன்களிடம் சண்டை போடும் போது ஒரு கட்டத்தில் நிராயுதபாணியாக நிற்பார். அவர் உயிரை வில்லன்கள் பறிக்க ஆயத்தமாகும் தருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ஒரு சூப்பர் காரில் தனக்கே உரிய ஸ்டைலில் சர்ரென்று வந்து நிற்பார்.

அவரது கார் வில்லன்களின் ஆயுதங்களை தன்னுடன் ஈர்த்து ஷாருக்கானை காப்பாற்றும். அப்போது ஷாரூக்கின் உடனிருக்கும் கதாநாயகி கரீனா கபூர் யார் இவர் என்று ரஜினியை பார்த்து கேட்பார். உடனே ரஜினி தனக்கே உரிய பஞ்ச் வசனம் பேசியடி காரிலிருந்து இறங்குவாராம். அவரை ஷாரூக்கான் மிகுந்த மரியாதையுடன் அறிமுகப்படுத்துவது போன்று இக்காட்சி எடுக்கப்படுகிறதாம். தீபாவளிக்கு ராஒன் படம் ரிலீசாகிறது இது தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்படுகிறது. இதுவரை இந்தப் படத்தை ரஜினியின் ரோபோ காப்பி என்று பேசி வந்த வட இந்திய ரசிகர்களோ, ரஜினியே நடிக்கிறார் என்று தெரிய வந்ததும் மிக ஆவலுடன் அந்த செய்தி உண்மையாகும் தருணத்துக்காக காத்திருக்கின்றனர்.

அதுதான் ‘ரஜினி மாஜிக்’!

வட இந்திய செய்தித் தாள்கள் மற்றும் இணையதளங்கள் இப்படித்தான் தொடர்ந்து சில தினங்களாக எழுதிவருகின்றன.

‘ரா ஒன் படத்தை நம்பர் ஒன்னாக்கிவிட்டார் ரஜினி’ என குறிப்பிட்டுள்ளது இந்துஸ்தான் டைம்ஸ். ‘ரா ஒன்னை ரெட் ஒன்னாக்கிவிட்டார் சூப்பர் ஸ்டார்’ என புகழாரம் சூட்டியுள்ளது. இன்னொரு பக்கம், விநியோகஸ்தர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர், ரஜினி நடிக்கிறாரா இல்லையா என்பதைப் பார்த்த பிறகு இந்தப் படத்தை வாங்க. ரஜினி நடித்தால் தென்னிந்திய உரிமை பெரும் விலைக்குப் போகும் என்பதால், படத்தை நேரடியாக ஈராஸின் துணை நிறுவனமான அய்ங்கரனே ரிலீஸ் செய்யத் தயாராக உள்ளது.

 

Post a Comment