'கற்றது தமிழ்' ராம் இயக்கி நடிக்கும், 'தங்க மீன்கள்' படத்தில் பத்மப்பிரியா நடித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இயக்குனர் ராம் எனது நண்பர். 'தங்க மீன்கள்' படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. ஆனால் படம் துவங்கும்போது, கால்ஷீட் இல்லாததால் நடிக்க முடியவில்லை. இப்போது அவர் கேட்டுக் கொண்டதால் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறேன். படத்தின் ஹீரோயின் என்று இன்னொருவர் இருந்தாலும் அதே அளவு முக்கியத்துவம் என் கேரக்டருக்கும் இருக்கும். இப்போதைக்கு கேரக்டர் பற்றி எதுவும் கூற இயலாது. அதை இயக்குனர்தான் சொல்ல வேண்டும். நான் நடித்த பெங்காலி படம் 20-ம் தேதி வெளிவருகிறது. இந்த ஆண்டு நான் நடித்த இரண்டு மலையாள படங்கள் வெளிவருகிறது. மேலும் இரண்டு படங்களில் நடிக்கிறேன். தமிழிலும் நடிக்கிறேன். அது பற்றிய முறையான அறிவிப்பு வரும்.
Post a Comment