ஜூன் 1ல் எம்.பி.ஏ. பட்டதாரியை மணக்கும் சிம்புதேவன்

|

Simbudevan Kiss Goodbye Bachelorhood On June1
இயக்குனர் சிம்புதேவன் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி எம்.பி.ஏ. பட்டதாரியான கலைவாணி என்பவரை மணக்கிறார்.

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் சிம்புதேவன். வடிவேலு இரட்டை வேடங்களில் நாயகனாக நடித்து ஹிட்டான படம் என்று உங்களுக்கே நன்றாகத் தெரியும். இந்த படத்தை தொடர்ந்து அறை எண் 305ல் கடவுள், இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் ஆகிய படங்களை இயக்கினார். தற்போது தனுஷை வைத்து மாரீசன் படத்தையும், இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தையும் இயக்கவிருக்கிறார்.

இந்நிலையில் சிம்புதவேனுக்கும், கமுதியைச் சேர்ந்த எஸ்.பி. கலைவாணி என்ற எம்.பி.ஏ. பட்டதாரிக்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. அவர்களின் திருமணம் வரும் ஜூன் மாதம் 1ம் தேதி மதுரையில் நடக்கிறது.

சிம்புதேவன் பிறந்து, வளர்ந்து, படித்தது எல்லாம் மதுரை தான் என்பது குறிப்பிடத்தக்கது.
Close
 
 

Post a Comment