23 ஆண்டுகளுக்கு முன் தான் நடித்து இயக்கி பெரும் வெற்றி பெற்ற புதிய பாதை படத்தை மீண்டும் ரீமேக் செய்கிறார் பார்த்திபன். இப்போதும் நடித்து இயக்கப் போவது அவர்தான்...
இதெல்லாம் தெரிந்த விஷயம்தானே என்கிறீர்களா.. தெரியாத சமாச்சாரம்... படத்துக்காக அவர் ஹீரோயின் தேடிக் கொண்டிருப்பது.
இந்தப் படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகள் யாரையும் அவர் அணுகவில்லை. புதிய முகமாகத் தேடி வருகிறார்.
இதுகுறித்த அறிவிப்பில் அவர் இப்படிக் குறிப்பிட்டுள்ளார்:
"மீண்டும் புதிய பாதைக்கு நாயகி தேடி தேடி தேடி தேடி... ஏன் வடநாட்டில்? தமிழ் நாட்டில் அழகான பெண்களே இல்லையா? என கேட்பார்கள். இருந்தால்... என் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். புகைப்படத்தை அனுப்பி வைக்கலாம். வாய்ப்பு இருப்பின் முறையாக தெரிவிக்கப்படும். vithaganparthiban@gmail.com."
யார் கண்டது... அடுத்த சீதா தமிழ்நாட்டிலிருந்தும் உருவாகலாம்... முயற்சி பண்ணுங்க!
Post a Comment