காதலரை பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினார் எமி

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மும்பை, : காதலரும் இந்தி நடிகருமான பிரதீக்கை தனது பெற்றோருக்கு அறிமுகப்படுத்தினார் எமி ஜாக்சன்.
'மதராசபட்டனம்' படத்தில் அறிமுகமானவர் இங்கிலாந்து நடிகை எமி ஜாக்சன். அடுத்து விக்ரம் ஜோடியாக 'தாண்டவம்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தின் இந்தி ரீமேக்கான 'ஏக் தீவானா தா' படத்தில் பிரதீக் பப்பருடன் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாகவும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாகவும் பாலிவுட்டில் செய்திகள் வெளியாயின. இதை இருவரும் மறுக்கவில்லை. இந்நிலையில் பிரதீக்கை லண்டன் அழைத்து சென்ற எமி, அவரது குடும்பத்தினருக்கு அறிமுகம் செய்துள்ளார்.

இதுபற்றி எமி கூறியதாவது: பிரதீக் என் நண்பர். அவருக்கும் எனக்குமான நட்பு ஸ்பெஷலானது. லண்டனில் உள்ள என் பெற்றோருக்கும் குடும்ப நண்பர்களுக்கும் பிரதீக்கை அறிமுகப்படுத்தினேன். என்னை விட என் சகோதரிகளுக்கு பிரதீக்கை அதிகம் பிடித்திருக்கிறது. என் பெற்றோருக்கும் அவரை பிடித்திருக்கிறது. இந்தி பட உலகில் இனவாத பிரச்னையை நான் சந்தித்ததாக லண்டன் மீடியாவில் வெளியான செய்தி தவறானது. அதை கிசு கிசு பகுதியில் எழுதியிருந்தார்கள். அது திரித்து எழுதப்பட்ட செய்தி. மும்பையில் வசிப்பதை என் சொந்த ஊரில் இருப்பது போல இருக்கிறேன். அதனால்தான் மீண்டும் இங்கு நடிக்க வந்துள்ளேன்.
இவ்வாறு எமி கூறினார்.


 

Post a Comment