ஒரே மாதிரி கேரக்டர்களில் நடிக்க மாட்டேன்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
மும்பை, : ஏற்கனவே நடித்த கேரக்டர் போலவே கதைகள் வந்தால் அதில் நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருக்கிறேன் என்று அசின் கூறினார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

'கஜினி' ரீமேக் மூலம் இந்தியில் அறிமுகமானேன். தொடர்ந்து தெலுங்கு 'ரெடி'யின் இந்தி ரீமேக்கில் சல்மான் கானுடன் நடித்தேன். தமிழில் 'காவலன்' படத்தில் நடித்த கேரக்டரில் இந்தியிலும் நடிக்க கேட்டார்கள். இதிலும் சல்மான்கான் ஹீரோ. நடித்த கேரக்டரில் மீண்டும் நடிப்பதில்லை என்ற முடிவில் உறுதியாக இருந்ததால் அதில் நடிக்கவில்லை. தொடர்ந்து வந்த கதைகளிலும் சில கேரக்டர்கள் நான் ஏற்கனவே நடித்தவையாக இருந்தன. இதனால் சில வாய்ப்புகளை கூட மறுத்திருக்கிறேன். தற்போது 'கஹானி' மாதிரி ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் வெளியாவது பற்றி கேட்கிறீர்கள்.

இது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்தான். சமூகத்திலிருந்துதான் சினிமா கதைகள் உருவாகின்றன. குறிப்பாக சமூகத்தை பிரதிபலிப்பதுதான் சினிமா. இந்த துறை இன்னும் ஆணாதிக்கமாகத்தான் இருக்கிறது. ஹீரோக்களை முன்னிலைப்படுத்திதான் படங்கள் எடுக்கப்படுகின்றன. இதற்கிடையில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் வருவது சிறப்பானது. ஆனால், அவை குறைந்த அளவே இருக்கின்றன.

என்னைப் பற்றி அதிக வதந்திகள் வருகின்றன. சில நடிகர்களுடன் இணைத்தும் செய்திகள் வெளியாகிறது. ஆனால், வதந்திக்கான ஆயுள் குறைவு என்பதால் அது நீண்ட நாட்கள் நீடிப்பதில்லை. இந்த வதந்திகளை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. என்னைப் பற்றி தெரியும் என்பதால் என் குடும்பத்தினர் எனக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். அதுதான் எனக்கு பெரிய ப்ளஸ்.


 

Post a Comment