மும்பை: கார் விபத்தில் அமிதாப்பச்சன் இறந்துவிட்டார் என இன்டர்நெட்டில் வதந்தி பரவியதால் அமிதாப் குடும்பத்தினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆனால் இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம். அவர் நலமோடு உள்ளார் என அவநரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அமிதாப் இப்போது அமெரிக்காவில் உள்ளார்.
அங்குள்ள மோரிஸ் டவுனுக்கும் ரோஸ் வெல்லுக்கும் இடையே நண்பரின் காரில் சென்று கொண்டிருந்த போது, திடீரென நிலை தடுமாறி ரோட்டின் நடுவே உள்ள சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்ததாம். பல தடவை கார் உருண்டதாம். இந்த விபத்தில் காரில் இருந்த அமிதாப்பச்சன் அந்த இடத்திலேயே பலியாகிவிட்டதாகவும், அவர் அணிந்திருந்த அடையாள அட்டையை வைத்து அமிதாப்பச்சன் என போலீசார் உறுதி செய்தததாகவும் செய்தி வெளியாகியிருந்தது.
இந்த செய்தி சில நிமிடங்களிலேயே நூற்றுக் கணக்கான இணைய பக்கங்களில் பரவியது.
அமிதாப்பச்சன் நலமாக இருக்கிறார் அவரைப் பற்றி வெளியான செய்திகள் வதந்திதான் என்று அமிதாப் தரப்பில் மறுத்துள்ளனர்.
இந்த வதந்தியால் அமிதாப்பச்சன் குடும்பத்தினரும் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஏற்கெனவே ரஜினிகாந்த், ராஜேஷ் கன்னா, திலீப் குமார், லதா மங்கேஷ்கர், கருணாநிதி போன்றோர் குறித்தும் இதுபோன்ற வதந்திகளை சிலர் திட்டமிட்டு பரப்பியது குறிப்பிடத்தக்கது.
Post a Comment