பில்லா 2 - என்ன சொல்றாங்க ஜனங்க...?

|

Billa 2 Public Opinion

அஜீத்தின் பில்லா 2 படத்துக்கு அவரது ரசிகர்கள், பொதுவான மக்கள் மத்தியிலிருந்து கலவையான கருத்துகள் வெளியாகிவருகின்றன.

அஜீத்தின் தீவிர ரசிகர்கள், இந்தப் படத்தை மங்காத்தாவை விட சூப்பராக இருக்கு என்று தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாட, சாதாரண ரசிகர்கள், இதெல்லாம் ரொம்ப ஓவர் என்கிறார்கள்.

படம் வெளியான இரு தினங்களுக்குள் பத்திரிகை, ஊடக விமர்சனங்கள் வெளியாகிவிட்டன. 99 சதவீதம் எதிர்மறையாகத்தான் வந்திருக்கின்றன.

அதேநேரம், படத்துக்கு முதல் மூன்று தினங்களுக்கான டிக்கெட்டுகள் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதால், ஓபனிங்குக்கு குறைச்சலில்லை. நாளை மாலைக்குப் பிறகுதான் பில்லா 2 -படத்தின் உண்மையான பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் தெரியவரும்.

சரி, படத்தைப் பற்றி பார்க்க வந்தவர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஃபேம் சினிமாஸ்...

இயக்குநர் சரவணன் (எங்கேயும் எப்போதும்)

நல்ல ஸ்டைலிஷ் மேக்கிங். அஜீத்துக்கு பக்காவாகப் பொருந்துகிறது அந்த டான் வேடம். டெக்னிக்கலாக நல்ல உழைப்பு தெரிகிறது. வேறென்ன சொல்ல!

கவுதம்

"படத்தின் தரம், லாஜிக் என்று சில குறைகள் இருந்தாலும், படம் எனக்குப் பிடித்திருக்கிறது. அஜீத்தை நான் ரசித்தேன். ஆனால் இன்னும் கவனமெடுத்துச் செய்திருந்தால், மங்காத்தாவை மிஞ்சியிருக்கும்."

காசி தியேட்டர்...

பிரசன்னா

"நான் அதிகாலை முதல் ஷோவுக்கு ரூ 650 கொடுத்து டிக்கெட் வாங்கினேன். மங்காத்தா மாதிரி த்ரில், ஆக்ஷன், கலக்கலான சீன்களை எதிர்ப்பார்த்தேன். அந்த திருப்தி கிடைக்கவில்லை என்பது உண்மைதான். தல, அடுத்த வாட்டி கேர்புல்லா இருங்க!"

ஜோதிகுமார்

இன்னும் நல்லா எடுத்திருக்கலாங்க. ஏன் இப்படி சொதப்பினாங்கன்னு தெரியல. நான் காலைக் காட்சிக்கு ரூ 500 கொடுத்து டிக்கெட் வாங்கினேன். என் காசு தண்டம்தான். அஜீத்துக்கு டான் வேஷம் பொருத்தமா இருந்தாலும், அவர் நடிக்கவே இல்லை. சும்மா கோட்டு போட்டுக்கிட்டு நடந்து வர்றாரு, போறாரு. ஏன்.. ஒரு டானுக்கு நகைச்சுவையே, காதல் உணர்ச்சியோ கூட இருக்காதா?

சத்யம் சினிமாஸ்..

ஆறுபேர் கொண்ட ஒரு இளைஞர் கூட்டம் வெளியில் நின்றபடி படத்துக்கு வருவோரை கலாய்த்துக் கொண்டிருந்தது. நின்று விசாரித்ததில், "ஜாலியா சினிமா பார்க்க வந்தா, இங்க ஒரு மூன்றாம் தர படத்தைப் பார்த்து 'கான்டாகிட்டோம்'. ஏன் சார் இப்படி சொதப்புறாங்க... ஆனா ஒண்ணு, இந்தப் படம் மூலம் டான்னா இந்தில அமிதாப், தமிழ்ல ரஜினிதாங்கிறதை மீண்டும் நிரூபிச்சிருக்காங்க! அடுத்து விஷ்ணுவர்தன் கூட சேர்ந்திருக்கார் அஜீத். அந்தப் படம் நல்லா வர வாழ்த்தறோம். ஆனா, கோட்டும் துப்பாக்கியும் வேணாம் தல... (நிறைய பேர் பேசி வச்சமாதிரி இப்படித்தான் சொல்றாங்க!)

 

+ comments + 1 comments

Anonymous
16 July 2012 at 16:41

Dai Nai unna nerula partha konduduvan

Thala Supper.. Billa Biggest Hit..

Post a Comment