சல்மான்கான் நடிப்பில் அடுத்து வெளிவரும் ஏக் தா டைகர் படம் பல்வேறு காரணங்களுக்காக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
லேட்டஸ்டாக இந்தப் படம் கிளப்பியிருக்கும் பரபரப்பு... படத்தின் சேட்டிலைட் உரிமை மட்டுமே ரூ 75 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்பதுதான். சோனி தொலைக்காட்சி நிறுவனம் இந்தப் படத்தை வாங்கியிருக்கிறதாம்.
இந்த செய்தி மட்டும் நிஜமாக இருக்கும்பட்சத்தில், இது ஒரு உலக சாதனை என்றே சொல்ல வேண்டும்.
யாஷ்ராஜ் நிறுவனம் தயாரித்துள்ள படம் இந்த ஏக் தா டைகர். இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமையை சமீபத்தில்தான் விலைபேசியது சோனி என செய்தி வெளியானது.
ஆனால் இதனை மறுத்துள்ள சோனி நிறுவனம், "நாங்கள் 15 மாதங்களுக்கு முன்பே இந்தப் படத்தின் சேட்டிலைட் உரிமையை வாங்கிவிட்டோம். அப்போது இந்த விலையை கொடுத்திருப்போமா என்பதை செய்தி வெளியிட்டவர்கள் யோசிக்க வேண்டும்," என அந்த நிறுவனத்தின் துணைத் தலைவர் சினேக ரஞ்சனி தெரிவித்தார்.
இந்தியில் வெளியான சிங்கத்துக்கு ரூ 18 கோடியும், ஹ்ரித்திக் ரோஷனின் க்ரிஷ் 2க்கு ரூ 38 கோடியும், அக்னீபாத் ரூ 41 கோடியும் சேட்டிலைட் ரைட்ஸாக கிடைத்தது. இதுவரை எந்த நடிகரின் படத்துக்கும் ரூ 50 கோடி சேட்டிலைட் உரிமைத் தொகையாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment