யுடிவி மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள 'தாண்டவம்' படம் செப்டம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிகிறது. தாண்டவம் படத்தில் விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். 'தெய்வதிருமகள்' படத்திற்கு பிறகு இந்த வெற்றி கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இதனையடுத்து, தாண்டவம் பாடல் வெளியீட்டு விழா ஆகஸ்ட் மாதம் பிரம்மாண்டாக வெளியிட படக் குழு முடிவு செய்துள்ளதாம். படத்தில் மொத்தம் 6 பாடல்கள்.
Post a Comment