விஐய், அஜித் ரசிகர்கள் மோதல்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
திருப்பூரில் நடிகர்கள் விஜய், அஜித் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் காயமடைந்தனர். திருப்பூர் அப்பாச்சி நகர் பகுதியில் உள்ள நடிகர் விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சிலர் நேற்று முன்தினம் சந்தித்துள்ளனர். விஜய், அஜித் நடித்த படங்கள் குறித்து பேசியுள்ளனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே 'தலையா, தளபதியா' என்று வாக்குவாதம் ஏற்பட்டது. இது முற்றி திடீரென்று இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். ஆவேசமடைந்த இரு தரப்பினர் ரீப்பர் கட்டைகளை எடுத்து ஓட, ஓட விரட்டி தாக்கிக் கொண்டனர். இதில், காயமடைந்த விஜய் ரசிகர் கருப்பையா (37), அஜித் ரசிகர்கள் சிவா (25), மோகன் (24) ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இருதரப்பினரும் அளித்த புகாரின் பேரில், போலீசார் விஜய் ரசிகர் மன்றத்தை சேர்ந்த ராமராஜ், அன்பு, கருப்பையா, அஜித் ரசிகர் மன்றத்தை சேர்ந்த சிவா, பழனியப்பன், மோகன் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரசிகர்கள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


 

Post a Comment