கம்பி மேல் நடந்து குத்தாட்டம் போட்ட ரோஜா!

|

Roja Doing Item Number   

‘வேட்டையாடு' திரைப்படத்திற்காக கழைக்கூத்தாடியாக நடித்திருக்கிறாராம் ரோஜா. அதில் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ள ரோஜா கம்பிமேல் நடந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார்.

90 களில் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. செல்வமணியுடன் திருமணம் குழந்தைகள் என செட்டிலாகிவிட்ட அவர் ஆந்திர அரசியலில் பரபரப்பாக இருக்கிறார். சினிமாவில் இப்போது கதாநாயகிகளின் அழகான அம்மாவாக வலம் வரும் ரோஜா வேட்டையாடு படத்தில் குத்தாட்டம் போட்டுள்ளாராம்.

கழைக்கூத்தாடிகளின் வாழ்கையைச் சொல்லும் அந்தப் பாடலுக்காக நடிகரும் இயக்குனருமான பாண்டியராஜனுடன் கழைக்கூத்தாடி வேடமணிந்து ஆடியிருக்கிறார் ரோஜா. மேலும் கழைக்கூத்தாடிகள் செய்வது போன்று கம்பி மேல் நடந்து சாகசம் செய்திருக்கிறாராம். இந்தப் படத்திற்காக அவருக்கு பெரிய தொகையை சம்பளமாகக் கொடுத்திருக்கின்றனராம்.

இந்தப் படத்தை விஜயபாலன் இயக்குகிறார். விடியல் ராஜு தயாரிக்கிறார். ரோஜா மற்றும் பாண்டியராஜனுடன் உதயதாரா, மனோ பாலா, நெல்லை சிவா, காதல் சுகுமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விஜய் நடித்த ‘நெஞ்சினிலே' படத்தில் ‘தங்க நிறத்துக்குத்தான் தமிழ்நாட்டை எழுதித்தரட்டுமா' என்ற பாடலுக்காக குத்தாட்டம் ஆடியவர் ரோஜா. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடனம் ஆடியுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Post a Comment