பொதுவாக ஒரு நடிகைக்குத் திருமணம் என்ற செய்தி வெளியாகும்போதே, தவறாமல் இடம் பெறும் தகவல், 'திருமணத்துக்குப் பின் நடிக்கமாட்டேன். இல்லத் தலைவியாக சேவை செய்வேன்' என்பதுதான்.
ஆனால் ராதிகா ஆப்தே கொஞ்சம் வித்தியாசமானவர்தான். நாடகத்திலிருந்து திரைக்கு வந்தவராச்சே...
ராதிகாவுக்கு சீக்கிரமே திருமணம் நடக்கிறது. தான் நடிக்கும் வெற்றிச் செல்வன் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்புக்கு வந்திருந்தார்.
உட்லண்ட்ஸ் தியேட்டரில் நடந்த இந்த ஷூட்டிங்கில் பங்கேற்ற அவர், பின்னர் நிருபர்களிடம் பேசுகையில், "ரத்த சரித்திரம், டோனி படங்களில் நடித்துள்ளேன். வெற்றிச் செல்வன் தமிழில் எனக்கு மூன்றாவது படம். இதில் வக்கீல் கேரக்டரில் வருகிறேன். தொழிலிலும் வைராக்கியமும் மற்றவர்களிடம் மென்மையாக நடக்கும் குணத்துடனும் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறேன்.
நல்ல கதையம்சம் உள்ள படம். சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயம் படத்தில் உள்ளது. லண்டனை சேர்ந்த இசை அமைப்பாளர் பெனட்டிக் டெய்வருடன் எனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை.திருமணத்துக்கு பிறகும் நடிப்பேன்.
தமிழில் நல்ல கேரக்டர்களை தேர்வு செய்து நடிப்பேன். எனது முந்தைய படங்களை போல் அல்லாமல் வெற்றிச் செல்வன் முழு கமர்சியல் படமாக வந்துள்ளது," என்றார்.
Post a Comment