குழந்தையைப் போன்றவர் ரஜினி - தீபிகா படுகோன்

|

Deepika Admires Rajinikanth S Child   

ரஜினி சார் ஒரு குழந்தையைப் போன்ற உற்சாகம் மிகுந்தவர். இந்திய சினிமாவில் அமிதாப்பும் ரஜினியும்தான் நான் பார்த்த மிகச் சிறந்த கலைஞர்கள் என்கிறார் தீபிகா படுகோன்.

சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், "ரஜினி சாருடன் நடிக்கிறோமே என்ற பயம் காரணமாக ஆரம்பத்தில் மன அழுத்தம் இருந்தது போல உணர்ந்தேன். ஆனால் செட்டுக்குள் போனதும் எல்லாவற்றையும் மறந்துவிட்டு, என் பாத்திரத்தில் மட்டும் கவனம் செலுத்தினேன். ஓம் சாந்தி ஓம் படத்தின் போதும் இப்படித்தான் நடித்தேன்.

கோச்சடையானைப் பொறுத்தவரை என்னை வியக்கவைத்தது, சூப்பர் ஸ்டார் ரஜினியின் எளிமையும், மாறாத உற்சாகமும்தான்.

ஒரு குழந்தையைப் போல கள்ளங்கபடமற்ற, துள்ளலை அவரிடம் பார்க்கலாம். திரையுலகில் இப்படி ஒரு உற்சாக மனிதரை நான் பார்த்ததில்லை.

எல்லா காட்சிகளும் மிக்ச சரியாக வரவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்காக எத்தனை முறை வேண்டுமானாலும் நடித்துத் தரத் தயாராக இருப்பார்.

ரஜினி, அமிதாப் ஆகிய இரு மேதைகளிடம்தான் இந்த அர்ப்பணிப்பை, தொழில் ஒழுங்கை நான் பார்த்திருக்கிறேன். அவர்களின் கண்களைப் பாருங்கள்.. இந்த சினிமாவை அவர்கள் எந்த அளவு நேசிக்கிறார்கள் என்பது தெரியும்...," என்றார்.

 

Post a Comment