பில்லா 2... சக்ரி டோலெட்டி சொன்ன நன்றியும், கேட்ட மன்னிப்பும்!

|

Chakri Apologises Disappointment Billa 2

சென்னை: பில்லா 2 படம் வெளியாகி 25 நாட்கள் தாண்டிவிட்டன. பெரிய எதிர்ப்பார்ப்புக்கிடையில், இதுவரை எந்த அஜீத் படமும் வெளியாகாத அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான அரங்குகளில் வெளியானது இந்தப் படம்.

ஆனால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஒரு படமாக அமைந்துவிட்டது பில்லா 2.

ஆக்ஷன் படம் என்ற வகையில், ஒரு அதிரடி சண்டைப் படமாக, முழுக்க முழுக்க 'ரா'வாகக் கொடுத்திருந்தார் சக்ரி. ஆனால் காட்சிகளில் சுவாரஸ்யமும் புத்திசாலித்தனமான திருப்பங்களும் இல்லை என விமர்சனங்கள் வந்தன.

அஜீத் தன் வேலையை சரியாக செய்தார். ஆனால் இயக்குநர் கோட்டைவிட்டுவிட்டார் என்றும் சில விமர்சகர்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.

இதைத் தொடர்ந்து படத்துக்கு கிடைத்த வரவேற்பு குறித்து தனது கருத்தை எழுதியுள்ளார் இயக்குநர் சக்ரி டோலெட்டி.

அதில், "'பில்லா 2' படத்தை விரும்பிய அனைவருக்கும் நன்றி. அதேநேரம் இந்தப் படத்தைப் பார்த்து ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் மன்னிக்கவும். அவர்களுக்கு என் வருத்தத்தைத் தெரிவித்து கொள்கிறேன். குறிப்பாக தல ரசிகர்களுக்கு," என்று குறிப்பிட்டுள்ளார்!

 

Post a Comment