'நான் முதல்வரானால் இவர்களை விதான்சவுதா கேட் பக்கம் கூட சேர்க்க மாட்டேன்' - அம்பரீஷ்

|

Amabareesh Slammed Mlas Failing Ser

பெங்களூர்: நான் மட்டும் முதல்வரானால், பொதுமக்களுக்கு சேவை செய்யத் தவறும் எம்எல்ஏக்களை விதான் சவுதா கேட் பக்கம் கூட சேர்க்க மாட்டேன் என்று நடிகர் அம்பரீஷ் கூறினார்.

கர்நாடக மாநிலம் ஹலகூரில் காங்கிரஸ் கமிட்டிகள் மற்றும் இளைஞர் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் மாநாடு நடந்தது. இதே நிகழ்ச்சியில், கர்நாடக மாநில காங்கிரஸ் துணை தலைவராக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள நடிகர் அம்பரீஷுக்கு பாராட்டு விழாவும் நடத்தப்பட்டது.

விழாவில் அம்பரீஷ் பேசுகையில், "தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட என்னை வெற்றி பெறச் செய்து மத்திய அரசுக்கு அனுப்பி வைத்து உங்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தீர்கள். இப்போதும் உங்களுக்கு சேவை செய்வது என் கடமையாகும்.

நான் பல்வேறு முதல்வர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்களில் சிலர் பொதுமக்களுக்கு சேவை செய்யாமல் காலம் கடத்தி வருகிறார்கள். நான் முதல்வரானால் இதுபோன்ற சட்டமன்ற உறுப்பினர்களை விதான் சவுதாவின் படிக்கட்டு அருகே மட்டும் அல்ல...கேட் அருகே கூட சேர்த்துக் கொள்ள மாட்டேன்.

எனவே, சட்டமன்ற தேர்தலில் பொதுமக்களுக்கும், இந்த சமூகத்துக்கும் சேவை செய்பவர்களை தேடி கண்டுபிடித்து அவர்களை விதான் சவுதாவுக்கு அனுப்பி வையுங்கள். எனக்கு பெங்களூரில் 60-வது பிறந்தநாள் விழா நடத்தப்பட்டது.

அதை இங்கு எனது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களாகிய உங்கள் மத்தியில் மீண்டும் கொண்டாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது," என்றார்.

 

Post a Comment