சினிமா வாய்ப்புகளை மறுக்கும் டிவி நடிகை ஹர்ஷா

|

Harsha Kadambari Serial

என் பெயர் மீனாட்சி தொடரில் அறிமுகமான ஹர்ஷா, ஜெயா டிவியில் காதம்பரி, விஜய் டிவியில் 7சி மலையாளத்தில் தொடர்கள் என பிஸியாக இருக்கிறார். சினிமாவில் நடிக்க விருப்பமில்லையாம். சின்னத்திரையிலேயே நல்ல பெயரும், புகழும் கிடைத்து வருவதால் சினிமா வாய்ப்புகளை வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம். பள்ளிப் பருவத்தில் இருந்து சீரியலில் நடித்து வரும் ஹர்ஷா தனது சின்னத்திரை பயணத்தை நம்மிடையே பகிர்ந்து கொள்கிறார்.

என் அப்பா ஹரிகிருஷ்ணன் நாயர், அம்மா ஹேமா, எனக்கு மாலினி,வினிதா என இரண்டு அக்காக்கள் இருக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. நான் தான் வீட்டில் கடைக்குட்டி. நான் பள்ளியில் படிக்கும் பொழுதிலிருந்தே மலையாள தொடர்களில் நடித்து வருகிறேன். மலையாள தொடரில் என்னை பார்த்துவிட்டு தான் தமிழில் நடிக்க கூப்பிட்டார்கள்.

விஜய் டிவிய்ல à®'ளிபரப்பான "என்பெயர் மீனாட்சி' தொடர்தான் நான் தமிழில் நடித்த முதல் தொடர். இப்பொழுது காதம்பரி தொடரிலும் விஜய் டிவியில் à®'ளிபரப்பாகி வரும் 7சி தொடரிலும், மலையாளத்தில் ஆசியாநெட் டிவியில் à®'ளிபரப்பாகும் மிகப் பிரபலமான தொடரான தேவிமாகாத்மியம் தொடரிலும் நடித்து வருகிறேன்.

காதம்பரியில் முதலில் மிதுனா தான் நடித்துக் கொண்டிருந்தார்கள். ஏனோ அவர் பாதியில் விலகிவிட்டார். அதனால் தற்போது நான் நடித்து வருகிறேன். கதாம்பரி 100 எபிசோட்களை கடந்து அருமையாக பயணத்திக் கொண்டிருக்கிறாள். முதன்முறையாக இந்த தொடரின் முலம் காதம்பரியாகவும் சரோஜினியாகவும் இரட்டை வேடத்தில் நடிக்கிறேன். 18ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதை, இருந்தாலும் நிகழ்காலம், எதிர்காலமும் இதில் இருக்கும், சமூக சிந்தனைகள் இருக்கும், மதக் கோட்பாடு பற்றியும் இருக்கும். படப்பிடிப்பின்போது எல்லாரும் எனக்கு தமிழ் கற்றுத் தருகிறார்கள், ரொம்ப உதவியாக இருக்கிறார்கள். அடுத்த தமிழ் தொடரில் நடிக்கும் பொழுது என் கேரக்டருக்கு நானே "டப்பிங்' பேச வேண்டும் என்று ஆசைபடுகிறேன். இப்போதான் தமிழில் ரெண்டாவது தொடர் நடிக்கிறேன். திருமணத்திற்கு இன்னும் நேரம் இருக்கிறது. அதைப்பற்றி இப்போது யோசிக்கவில்லை

சினிமாவில் நடிக்க எனக்கு விருப்பமில்லை. மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் பெரியத்திரையில் நிறைய வாய்ப்புகள் வருகிறது ஆனால் சின்னத்திரையே போதும் என்று நினைக்கிறேன் என்று கூறிவிட்டு சூட்டிங்கிற்கு கிளம்ப தயாரானார் ஹர்ஷா.

 

Post a Comment