புதுமுகங்கள் நடிக்கும் த்ரில்லர் படம் 'சௌந்தர்யா'!

|

Soundarya Nmew Thriller Is On The Way

புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வரும் புதிய த்ரில்லர் படம் சௌந்தர்யா, விரைவில் ரசிகர்களை மிரட் வருகிறது.

ஏ.பி‌.சி‌. ட்‌ரீ‌ம்‌ஸ்‌ எண்‌டர்‌டெ‌ய்‌னர்‌ஸ்‌ தயா‌ரி‌க்‌கும்‌ பு‌தி‌ய படம்‌ 'செ‌ளந்‌தர்‌யா'‌. இந்‌தப்‌ படத்‌தி‌ன்‌ கதை‌ எழுதி‌ டை‌ரக்‌ஷன்‌ செ‌ய்‌து‌ உள்‌ளா‌ர்‌ சந்‌தி‌ரமோ‌ஹன்‌.

பு‌துமுகங்‌கள்‌ கோ‌வி‌ந்‌த்‌, கி‌ல்‌லர்‌ கா‌சி‌ம்‌, ரி‌த்‌தூ‌ஸன்‌, சா‌ரதி‌, சந்‌தோ‌ஷ்‌, வி‌னி‌த்‌ வி‌னு, சஞ்‌சுகொ‌ட்‌டே‌ரி‌ என்‌று பலர்‌ நடி‌க்‌க, இவர்‌களுடன்‌ மா‌றுபட்‌ட வே‌டத்‌தி‌ல்‌ சி‌ரி‌ப்‌பொ‌லி‌ எப்‌எம்‌எஸ்‌ நடரா‌ஜன்‌ நடி‌த்‌துள்‌ளா‌ர்‌.

ஆயு‌ர்‌வே‌த வை‌த்‌தி‌யசா‌லை‌யி‌ல்‌ மஜா‌ஜ்‌ வே‌லை‌ செ‌ய்‌யு‌ம்‌ அழகி‌ய இளம்‌ பெ‌ண்‌ செ‌ளந்‌தர்‌யா. அவள்‌ அழகி‌ல்‌ மயங்‌கும்‌ வி‌மல்‌, அவள்‌ தன்‌னி‌டம்‌ அப்‌படி‌ பழகுவா‌ள்‌ இப்‌படி‌ நடந்‌து கொ‌ண்‌டா‌ள்‌ என்‌று இல்‌லா‌த பொ‌ல்‌லா‌த செ‌ய்‌தி‌களை‌ நண்‌பர்‌களுடன்‌ பகி‌ர்‌ந்‌து கொ‌ள்‌ள, அந்‌த பொ‌ய்‌ செ‌ய்‌தி‌யை‌ நம்‌பு‌ம்‌ நா‌ன்‌கு இளை‌ஞர்‌கள்‌, செ‌ளந்‌தர்‌யா‌வி‌டம்‌ செ‌ன்‌று தங்‌களது ஆசை‌க்‌கும்‌ இணங்குமா‌று வலி‌யு‌றுத்துகி‌ன்‌றனர்.

அதற்‌கு அவள்‌ சம்‌மதி‌க்‌க மறுக்‌கி‌றா‌ள்‌. இதனா‌ல்‌ ஆத்‌தி‌ரம்‌ அடை‌யு‌ம்‌ அந்‌த நா‌ல்‌வரும்‌ அவளை‌ பா‌லி‌யல்‌ பலா‌த்‌கா‌ரம்‌ செ‌ய்‌கி‌ன்‌றனர்.

இதில் சௌந்‌தர்‌யா உயி‌ரிழக்க, பின்னர் ஆவியாக வந்‌து அவர்‌களை‌ எப்‌படி‌ பழி ‌வா‌ங்‌குகி‌றா‌ள்‌ என்‌பதை‌ பு‌தி‌ய ஸ்‌டை‌லி‌ல்‌ படமா‌க்‌கி‌ உள்‌ளே‌ன்‌ என்‌கி‌றா‌ர்‌,‌ இயக்‌குநர்‌ சந்‌தி‌மோ‌ஹன்‌.

இந்‌தப்‌ படத்‌தி‌ற்‌கு அஜ்‌மல்‌ அஜீ‌ஸ்‌ என்‌பவர்‌ இசை‌யமை‌த்‌தி‌ருக்‌கி‌றா‌ர். ஆனை‌மலை‌, ஆனை‌க்‌கட்‌டி‌, தளி‌க்‌குள்‌ளம்‌ பீ‌ச்‌ போ‌ன்‌ற இடங்‌களி‌ல்‌ படமா‌க்‌கி‌யுள்ளாராம் இயக்குநர்.

செப்டம்பரில் இந்தப் படம் வெளியாகிறது.

 

Post a Comment