ஹைதராபாத்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தெலுங்கு நடிகர் பவன்குமார் கைது செய்யப்பட்டார்.
அயனாவரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரின் புகாரின் பேரில், சென்னை காவல் துறையினர் நடிகர் பவன்குமாரை கைது செய்துள்ளனர். நடிகர் பவன்குமார் துபாயில் வேலை வாங்கித் தருவதாக கூறி, ரூ.5 லட்சம் மோசடி செய்ததாக மணிகண்டன் தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
தமிழில் மூணு ரெண்டு ஏழு என்ற படத்திலும் தெலுங்கில் ஜிங்கா படத்திலும் நடித்து வருகிறார் பவன்குமார்.
“நானும், பவன்குமாரும் நண்பர்கள். வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக என்னிடம் ரூ.5 லட்சம் பணம் பவன்குமார் வாங்கினார். இதுவரை வேலை வாங்கி தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டாலும் தரவில்லை. தற்போது கொலை மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்று மணிகண்டன் தனது புகாரில் தெரிவித்திருந்தார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை கமிஷனர் ராதிகா, துணை கமிஷனர் ரவிச்சந்திரன், சப்- இன்ஸ்பெக்டர் ரவிவர்மா விசாரணை நடத்தி புதுமுக நடிகர் பவன்குமாரை இன்று கைது செய்தனர்.
Post a Comment