புதிதாக தயாராகும் ஒரு படத்துக்கு '4' என்று பெயரிட்டுள்ளனர். இந்தப் படமும் மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதுதான்.
தனுஷ் நடிக்க, அவர் மனைவி ஐஸ்வர்யா இயக்கிய படம் 3. படத்தின் தலைப்பு மிக வித்தியாசமாக அமைந்து, சீக்கிரமே பாப்புலரானது.
அடுத்து இதே பாணியில் புதிய படம் ஒன்றிற்கு '4' எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
இந்தப் படத்தின் கதை: ப்ளஸ்டூவில் பெயிலாகிவிடும் நான்கு மாணவர்கள், வீட்டுக்கு பயந்து ஓடிப் போகிறார்கள். அதன் பிறகு அவர்கள் படித்த பள்ளியில் அடுத்தடுத்து கொலைகள் விழ, அதற்கும் ஓடிப்போன மாணவர்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது...
பகவதி பாலா இயக்கும் இந்தப் படத்தில் பாலாஜி, வித்யா, ஆத்தூர் பால்வெங்கடேஷ், தேனிப்ரியா, அக்ஷயா உள்பட பலர் அறிமுகமாகின்றனர்.
சுதந்திரதாஸ் பாடல்களுக்கு குட்லக் ரவி இசையமைக்கிறார்.
தமிழகம் மற்றும் கோவாவில் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. விரைவில் திரைக்கு வருகிறது படம்.
Post a Comment