சென்னை: தன் அண்ணன் சத்யநாராயணாவுக்காக பெங்களூரில் திருமண மண்டபம் கட்டித் தரப் போகிறார் ரஜினி என்ற செய்தி மீடியாவில் உலாவர ஆரம்பித்துள்ளது.
ரஜினிக்கு சொந்தமாக சென்னை கோடம்பாக்கத்தில் ஒரு திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தை முதலில் தன் பெயரில் கட்டியவர், பின்னர் அதை தமிழக மக்களுக்கு எழுதி வைத்ததாக அறிவித்தார். அதற்கான உயிலையும் பொதுமக்கள் மத்தியில் காட்டினார்.
இப்போது ஒரு அறக்கட்டளை மூலம் இந்த மண்டபம் நிர்வகிக்கப்படுகிறது.
அடுத்து இதேபோல, ரஜினியின் பூர்வீக கிராமமான கிருஷ்ணகிரி நாச்சிக்குப்பத்திலும் அமைக்கவிருக்கிறார். நூலகம் போன்றவற்றையும் அமைக்கப் போகிறார்.
இந்த நிலையில், தன்னை வளர்த்து ஆளாக்கிய, தான் தந்தை ஸ்தானத்தில் மதிக்கும் அண்ணன் சத்யநாராயணாவுக்காக பெங்களூரில் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப் போவதாகக் கூறப்படுகிறது. தனது தாய்-தந்தை பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அறக்கட்டளை மூலம் இந்த மண்டபத்தை அவர் கட்டவிருக்கிறாராம்.
அதற்காக பெங்களூரில் ஓர் இடத்தை விலைக்கு வாங்கிவிட்டதாகவும் தெரிகிறது. ஆனால் இதுகுறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்தனர், ராகவேந்திரா மண்டப நிர்வாகிகள்.
Post a Comment